Oh Mother Ocean, tell us!
why did kumuthini came late?
carrying our people’s sufferings as corpses
kumuthini came bleeding.
did you see that, Mother Ocean?
what have become of Karthigesu?
in which shores he laid with swollen body?
O….! the *Solaka wind!
if you have switched your blowing direction
you would have told Nudumtheevu
that Kumuthini won’t come.
In the distant island
where the news of the deaths won’t reach,
the poor people wait,
after telling their despairs and sorrows
to the ocean’s waves
Mother Ocean! you are a barren
why you left those islands all alone without aide?
Mother Ocean…
build new graves in the memory
of those who have died
In your long expansions
abandoned.
And remind us of those ‘orphan graves’.
But,
the graves to come are not just the memories of loss.
Let they be the memories of our cause.
*Solaka Wind: the south west wind
By : Nilanthan
Translated By : Pratheepa
கடலம்மா… நீயே சொல்
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?
எம்மவரின் அவலங்களைச்
சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
‘குமுதினி’ குருதி வடிய வந்தாள்.
கடலம்மா கண்டாயோ
கார்த்திகேசு என்னவானான்?
எந்தக் கரையில்
உடலூதிக் கிடந்தானோ?
ஓ…! சோழகக் காற்றே
நீ,
வழம்மாறி வீசியிருந்தால்…
‘குமுதினி’ வரமாட்டாள் என்று
நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.
பாவம்
மரணங்களின் செய்தி கூடக்
கிட்டாத தொலைதீவில்,
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்
காத்திருக்கும் மக்கள்…
கடலம்மா நீ மலடி
ஏனந்தத் தீவுகளை
அனாதரவாய்த் தனியே விட்டாய்?
கடலம்மா…
உன் நீள் பரப்பில்
அனாதரவாய் மரணித்த எம்மவரை
புதிய கல்லறைகளை எழுப்பி
‘அனாதைக் கல்லறைகள்’ என நினைவூட்டு.
ஆனால்,
இனிவருங் கல்லறைகள்
வெறும்
இழப்புக்களின் நினைவல்ல,
எமது
இலட்சியங்களின் நினைவாகட்டும்!
-நிலாந்தன்
1 Comment