ஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது யுகபுராணம். – எழுநா